Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநர் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை"- அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

“ஆளுநர் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

-

 

"வெளிநாடு செல்லும் பிரதமரைப் பார்த்து ஆளுநர் கூறுகிறாரா?"- அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
Video Crop Image

வள்ளலார் குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக மின்சாரம், நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்,

மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தமிழ்ப் பண்பாடும்- விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ