
77-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் நடத்தவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார், அமிதாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’……. ட்ரெய்லர் வெளியீடு!
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிண்டியைச் சுற்றி கனமழை பெய்தது. இதனால் ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் (ஆகஸ்ட் 15) மழை தொடரும் என்று கணித்துள்ளது.
கனமழைக் காரணமாக, விருந்தினர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தேநீர் விருந்தை ஒத்திவைக்க ராஜ்பவன் முடிவுச் செய்துள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’….. ட்ரெய்லர் வெளியானது!
ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.