தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், “துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது உள்ளிட்ட 13 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால வரம்புக்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்கள், அரசின் உத்தரவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போடுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.