ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற நேற்று இரவு இராஜபாளையம் வந்த தமிழக ஆளுநர் R.N.ரவி நேற்று இரவு ராம்கோ ஓய்வு விடுதியில் தங்கினார்.
தொடர்ந்து, இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை வரையறு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கொடிமரத்தை தொட்டு வணங்கிவிட்டு கோவிலுக்கு சென்ற ஆர்.என்.ரவி அங்கு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னரை தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து வெளியே வந்த ஆளுநர் ரவி ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கு உணவு வழங்கினார். தொடர்ந்து அவர் அவருக்கு ஸ்ரீ ஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த ஈளுநரை மணவாள மாமுனிகள் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜர் வரவேற்றார். தொடர்ந்து ஆண்டாள் கோவில் தரிசனம் முடித்த ஆளுநர் இராஜபாளையம் புறப்பட்டு சென்றார்.
இன்று காலை இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற உள்ள பழைய மாணவர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆளுநர் பிற்பகலில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க உள்ளார்.