Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

-

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், உடனடியாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும்!

பாமக எல்லோருக்கும் பொதுவான கட்சி, சில அரசியல் கட்சி பாமகவை பயன்படுத்தி விட்டன என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியுடன், ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்போம்! 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் அது குறித்த வியூகங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாங்கள் முடிவு எடுப்போம்!

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

சென்னை அயனாவரத்தில் (AIOBC-REA)அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நல சங்க தென் மண்டல மாநாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு மேடையில் பேசினார்.

அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியபோது,

எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு OBC, OBC மட்டுமல்லாமல் ஜாதி, மதம், இனம், மொழியை வைத்து அடக்கி ஒடுக்கி, அடிமையாக்கி இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் முன்னேறிய சமூகத்திற்கு இணையாக மற்றவர்கள் வர வேண்டும் என்பது தான் சமூக நீதி.

சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். முதலில் அதன் அர்த்தம் புரிய வேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்.

எனக்கு மிகப்பெரிய வருத்தம், அம்பேத்கரை ஒரு குறிப்பிட சமுகத்தை சேர்ந்தவர் என ஒரு வட்டத்திற்குள் வைத்து விட்டனர், காந்திப்போல அம்பேத்கரும் இந்தியாவிற்கு முக்கிய, எல்லோருக்குமான தலைவர்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது எங்க அப்பா ஏர் ஒட்டி கொண்டிருப்பார் அவருக்கு உதவியாக நான் இருந்திருப்பேன்.

நமக்கான வரலாறு நிறைய உள்ளது. அதனை கேட்டால் எல்லோரும் தூங்கி விடுவீர்கள்.

நமது இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி தெரிந்து கொள்வதற்கு பொறுமை கிடையாது. எல்லோரும் மொபைல் போனில் சினிமாவையும் நடனத்தையும் பொழுதுபோக்காக பயன்படுத்துவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளனர். அடுத்த வாரம் என்ன படம் வெளியாகிறது, தலயா-தளபதியா என பேசி வருகின்றனர்.

தற்போதைய காலத்தில் சமூக நீதி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்கான அர்த்தம் புரியாமல் சமூகநீதி என்று பேசுகிறார்கள். நான் சில அரசியல் கட்சிகளை தான் கூறுகிறேன்.

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு சமூக நீதி பேசுகிறவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எவ்வளவோ செய்து இருக்கலாம் என்றார் அன்புமணி ராமதாஸ்.

பாமக கட்சி யாருக்கும் எதிரானது கிடையாது. எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல, எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, முன்னேறிய சமூகத்தினருக்கு கூட எதிரானவர்கள் அல்ல.

எல்லோரும் அவர்களுடைய மொழிமை பெருமையாக பேசலாம், அவர்களுடைய குடும்பத்தை பெருமையாக பேசலாம், அவர்களது ஜாதியை பெருமையாக பேசலாம், அவர்களது மதத்தை பெருமையாக பேசலாம், ஆனால் உலகில் மற்ற குடும்பத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ இழிவாக பேசக்கூடாது. இப்படிப்பட்ட நமது கட்சியை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொண்டனர் என்றார்.

பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,

தமிழக முதல்வர், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை முதலில் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பீகார் மற்றும் கர்நாடக மாநிலங்கள் நடைபெறுவது போல தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

அரசியல் சாசன சட்ட திருத்தம் ஒன்பதாவது அட்டவணையின் படி இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதிலும் உச்ச நீதிமன்றம் கை வைக்கப் பார்ப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு பதில் அளித்து பேசிய அவர்,

தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு எதிராக இந்த எதிர்ப்பும் கிடையாது என்றும் ஆளுநர் மாநில அரசின் இணைந்து முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் தெரிவித்தார்.

ஆனால் தமிழக ஆளுநர் அவரை நியமனம் செய்த கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகிறார் அது தவறானது நிச்சயமாக அதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் தடை சட்ட மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ளது என்று கூறிய அவர் இரண்டாவது முறை ஆன்லைன் தடை சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி வந்து போராட்டத்தை நடத்தினார்கள் என்று ஆளுநர் குற்றச்சாட்டு வைத்தார். அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் அது குறித்த வியூகங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாங்கள் எடுப்போம் என்றார்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

 

என்எல்சி விவகாரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மூன்று பகுதிகளை ஏல பட்டியலில் இருந்து நீக்கியதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று முறை ஏலபட்டியலில் சென்று யாரும் அதை எடுக்கவில்லை.

இந்த மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் வராது என்று அமைச்சர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக மட்டுமே சொல்லியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் என்எல்சி 1,1(A)&2 ஆகிய வற்றில் நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

கடந்த 66 ஆண்டுகளக கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் பாதிப்பு போன்ற என்னென்ன பாதிப்புகள் உள்ளது என்று IIT மாணவர்கள் மூலம் மூன்று மாதத்தில் ஆய்வு அறிக்கை தயார் செய்து அதை அரசுக்கு அளித்த பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலக்கரி சுரங்கம் அமையும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகிறது. நானும் டெல்டா காரன், டெல்டாவை பாதுகாப்போம் என முதல்வர் கூறுகிறார்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

அப்படி இருக்க ஏன் முதலவர் அதற்கு அனுமதி தர மாட்டோம் என கூற ஏன் மறுக்கிறார். தஞ்சாவூர்காரர்கள் புண்ணியம் செய்தவர்கள் கடலூர்காரர்கள் பாவம் செய்தவர்கள் என கேள்வி எழுப்பினார் ?

எனவே மத்திய அரசும், மாநில அரசும் ஏதோ சூழ்ச்சி செய்வதாகவே தெரிகிறது. இது தொடர்பாக முதலமைச்சர், வேளாண் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் என யாரும் வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சரும் வாய் திறப்பதில்லை. அண்ணாமலையும் வாய் திறக்கவில்லை.

ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் இன்னும் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்.

கடலூர், நெய்வேலி பிரச்சனை என்று எடுத்து கொள்ள கூடாது. இது தமிழகத்தின் பிரச்சனை. 1.50 ஏக்கர் விவசாய நிலத்தை அழிக்க பார்க்கிறார்கள்.
800 மெகா வாட் மின்சாரத்திற்காக அதுவும் மாசுபாடுள்ள மின் உற்பத்திற்காக விவசாயிகள் நிலத்தை அழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

அனைவரும் அரசியல் பேச வேண்டும்! அனைவருக்கும் அரசியல் தேவை, 18 வயதுக்கு வந்தாலே நாம் உடலில் உள்ள நகம் முதல் அனைத்தும் அரசியலில் நகரும், பேசும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூறினார்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது,

அரசியலில் நிறைய தலைவர்கள் உள்ளனர். ஆனால் அரசியல்வாதிகள் கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் கொள்கை பேசுகிற அரசியல் கட்சி எதுவுமே கிடையாது, மக்களை சார்ந்த கொள்கை, கோட்பாடு என மக்களுக்கான கட்சியாக இருப்பது பாமக மட்டும் தான்.

அதனாலே இந்த மாநாட்டிற்கு அன்புமணி ராமதாஸ் அவர்களை அழைக்க ஆலோசனை செய்தேன். ஒரு அமைச்சர் வாட்ச் பில்லை கேட்டும் விவகாரம் இன்று வரை ஓடிக்கொண்டுள்ளது அப்படி உள்ளது தற்போதைய அரசியல்.

1948, OBC இட ஒதுக்கீடு கொண்டு வர அம்பேத்கர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என அனைவருக்கும் தெரியும். OBC இட ஒதுக்கீடு கடந்த வந்த பாதையை விவரித்தார்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

அனைவரும் அரசியல் பேச வேண்டும்! அனைவருக்கும் அரசியல் தேவை, 18 வயதுக்கு வந்தாலே நாம் உடலில் உள்ள நகம் முதல் அனைத்தும் அரசியலில் பேசும் என்றார்.

252 சமூகமும் OBC இட ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். ஆனால் அது நம் மக்களுக்கு தெரியாமலே உள்ளது. OBC ஓட ஒதுக்கீடு பிரச்சனை என்றாலே ஏதோ பாமக கட்சிக்கு மட்டும் என எடுத்துக்கொள்கினர் அப்படி கிடையாது என்றார்.

MUST READ