Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

 

"அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

77வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு இன்று கடிதம் அனுப்புகிறேன். ஆரியம், திராவிடம், சனாதனம் என ஆளுநர் பேசி வருவது கபட வேடம் என்பதை அறிந்திருக்கிறோம். நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தராமல் உள்ளார். தமிழக மாணவர்களைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டித்து, 77- வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் 15) மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ