தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வுச் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் சேதம் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இதையடுத்து, சேதமான பேருந்துகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட டிரைலர்!
அதைத் தொடர்ந்து, “அரசுப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில், தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கையை அந்தந்த கோட்ட மேலாண் இயக்குநர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பேருந்துகளில் கண்டறியப்பட்ட சேதத்தை அடுத்த 48 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.