சென்னை திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் அவரது வீட்டிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!
விம்கோ நகரில் உள்ள பூம்புகார் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராகவும், திமுகவில் நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (அக்.26) காலை வீட்டில் இருந்த காமராஜை, அவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இதில் பலத்த காயமடைந்த காமராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். படுகொலைச் செய்யப்பட்ட காமராஜின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையையும் ஏற்படுத்தியுள்ளது.