Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

-

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு… இரு இளம் நடிகர்கள் பங்கேற்பு…

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது 46% ஆக உள்ள அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூபாய் 2,587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்; அதேபோல் அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1- ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்… புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MUST READ