Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!

-

 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!
File Photo

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது, போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்தது உள்ளிட்டப் புகார்களில் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் எல்லப்பன். நாட்றம்பள்ளியின் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான இவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டித் தோட்டக்கலைத்துறையின் உதவி அலுவலர் பாலதண்டாயுதம் ஆகியோர் தமது உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பரமசிவம் மற்றும் பாலதண்டாயுதம் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தோல்வி அடைந்த தமது மகன் உள்பட நான்கு பேர் தேர்வில் வென்றது போல் மாற்றி அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறினர். அதற்காக, போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கிய அவர்கள், 27 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!

இதையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், தோட்டக்கலைத்துறையின் உதவி அலுவலர் பாலதண்டாயுதத்தை கைது செய்த காவல்துறையினர், பரமசிவம் உள்ளிட்ட மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.

MUST READ