தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு அரசிடமும், முதலமைச்சரிடமும் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை
யார் இந்த ஆர்.சண்முகசுந்தரம்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
1989- ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஆர்.சண்முகசுந்தரம். அதைத் தொடர்ந்து, கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பதவி வகித்தார்.
பிரபல இந்தி பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்
கடந்த 2002- ஆம் ஆண்டு முதல் 2008- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அமைந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டிருந்தார்.