தமிழக அரசு அலுவலகங்களில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் நாள்தோறும் காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சில அலுவலகங்கள் தவிர பெரும்பான்மையான அலுவலகங்களில் காட்சிப்படுத்துவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல் அகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஒரு ஆங்கில சொல்லையும், அதற்குரிய தமிழ் சொல்லையும், ஒரு திருக்குறளைப் பொருளுடனும், கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அரசாணை உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்”- மாணவி நந்தினி பேட்டி!
ஆகவே, அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து அலுவலக கரும்பலகை (அல்லது) வெள்ளைப் பலகையில் 4 அடிக்கு 3 அடி என்ற அளவில் தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் தினமும் எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையை தமிழ் வளர்ச்சித் துறையினர் கண்காணித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.