“உன் விரல் நுனியில் கூட கலை விளையாடுதே” குமரி திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு கொண்டாடும் வகையில் “ஆள்காட்டி விரலில்” திருவள்ளுவர் சிலையை வரைந்து அரசுப்பள்ளி மாணவர் அசத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குமரியில் திருவள்ளுவர் சிலையை அமைக்கப்பட்டு 25ஆம் ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் முன்னிலையில் ஓவிய ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அரவிந்த் தன்னுடைய ஆட்காட்டி விரலில் திருவள்ளுவர் சிலையை வரைந்தார்.
கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையிலும், திருவள்ளுவர் சிலை ஒரு அற்புதமான மற்றும் நமது பாரம்பரியத்தின் கம்பீரமான நினைவுச் சின்னமாகும், ஆட்காட்டி விரலில் படம் வரைய தேர்ந்தெடுத்ததற்கு காரணம்
திருவள்ளுவரின் பேதைமை மற்றும் பெருமை, திருக்குறள் ஆகியவற்றின் சான்று இந்த திருவள்ளுவர் சிலை என்பதை சுட்டிக்காட்ட உதவும் ஆட்காட்டி விரல். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் அரவிந்த் மாணவர் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வழிகாட்டுதலின்படி தன்னுடைய “ஆட்காட்டி விரலில்” அந்த விரல் அளவிலே மை பேனா கொண்டு திருவள்ளுவர் சிலை ஓவியத்தை மாணவர் அரவிந்த் 5 நிமிடங்களில் வரைந்தார். உடன் உதவி ஆசிரியைகள் இருந்தனர். இந்த ஓவியத்தைப் பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்துக்கும் , பள்ளி மாணவர் அரவிந்த்க்கும் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.