
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!
இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும். இதற்காக, ஐந்து வயது நிறைவடைந்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
அத்துடன், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதைப் பற்றி துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் விதமாக செயல்பட வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கடமை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.