Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!

மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!

-

- Advertisement -

 

மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!
Video Crop Image

மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கிரானைட் குவாரிகளை அமைக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, ஐயாப்பட்டி, திருச்சுனை ஆகிய மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்கப்படவுள்ளன. இங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கிடைக்கும் பல வண்ண கிரானைட் கற்களை 20 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்க ஒப்பந்தம் வெளியீடப்பட்டுள்ளது. கிரானைட் குவாரிகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் அக்.30- ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அக்.31- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான, விவரங்களை அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து- 4 பேர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்க தடைவிதிக்கப்பட்டன. கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, 200- க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன.

MUST READ