
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4.5% கொழுப்பு சத்துகளுடன் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக 3.5% கொழுப்புச் சத்துக் கொண்ட ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவில் உற்பத்திச் செய்யப்படுகின்றன.
அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதே விலைக்கே ஊதா நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டை விட தற்போது விநியோகம் செய்யும், ஊதா நிற பாக்கெட் பால் அடர்த்திக் குறைந்தும் சுவை இல்லாமலும் உள்ளதாக பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறுகையில், மக்கள் மத்தியில் ஊதா நிற பால் பாக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மக்கள் இதனை விரும்பி வாங்குவதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
வேலூர், திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு பதிலாக, ஊதா நிற பால் பாக்கெட் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.