Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?

-

 

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?

அதன்படி, குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள், பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,777 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 12- ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும், பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். 9 பணியிடங்களுக்கான உதவி வனக்காவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வும், கடந்த நவம்பரில் நடந்த நிலையில் அதன் முடிவுகளும் இந்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்….. எந்த படத்தில் தெரியுமா?

இதோடு பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட 15 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, குரூப் 2 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,240- லிருந்து 5,860 ஆக அதிகரித்துள்ளது.

MUST READ