சென்னையில் நாளை 251 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை நாளை 7,93,947 தேர்வர்கள், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும், சலுகை நேரமாக 9 மணி வரையும், அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
சென்னையில் நாளை 251 தேர்வு மையங்களில் 3,759 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 75,185 தேர்வர்கள் நாளைய தேர்வை எழுதுகின்றனர்.