டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு முடிவுகள், வரும் ஜனவரி 12- ஆம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டு நடத்தப்பட்ட 14 தேர்வுகளில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். நடப்பாண்டில் 9 தேர்வுகள் உட்பட 32 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குரூப்- 2 தேர்வில் அதிகளவிலான தேர்வர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குரூப்- 2 முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
ஒரே நேரத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழலாலும், புயல், வெள்ளம் காரணமாகவும், விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.