ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரையிலான 12.4 கி.மீ சாலையை 5 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கிவைத்தார்.
ஜி.எஸ்.டி சாலை, கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கடக்க மாற்று சாலையாக அமையும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு கட்டபணிகளை முன்னெடுக்கும் நிலையில் தென் சென்னை, ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து வண்டலூர் சென்று செல்லும் நிலையில் கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் நல்லாம்பாக்கம், அருங்கால், காட்டூர், காரணைபுதுச்சேரி வழியாக ஊரப்பாக்கம் சென்றடையும் இந்த சாலை 25 ஆண்டுகளாக வனத்துறை தடையால் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
அரசு எடுத்த முயற்சியால் வனத்துறை அனுமதி பெற்று 12.4 கி.மீ தூரம் உள்ள சாலையை 5 கோடி மதிப்பிட்டில் புதுப்பிக்கும் பணியை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலஷ்மி மதுசூதனன் ஆகியோர் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிவைத்து சாலை சீரமைப்பு பணியை துவக்கிவைத்தனர்.
அப்போது செய்தியாலர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 25 ஆண்டுகளாக மக்கள் வேண்டுகோளாக இருந்த இந்த சாலை வனத்துறையின் தடையால் சீரமைக்கபட்டாமல் இருந்தது. அரசு வனத்துறையின் மூலம் அனுமதி வழங்கி 12.4 கி.மீ தூரம் சாலையை ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிரமைக்கப்படுகிறது.
இதனால் இங்குள்ள கிரமாங்களை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பயணிக்கவும், ஜி.எஸ்.டி சாலையில் முக்கிய விழா தினங்கள், வார விடுமுறை தினங்களில் ஏற்படும் போக்குவரத்துக்கு மாற்று சாலையாக அமையும் என்றார்.