சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை இயற்கைக் கல்விக்கான முதன்மை மையமாக மாற்றமும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும், மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்!
பூங்காவை மேம்படுத்தும் திட்டத்தின் படி, தாவரங்கள் மற்றும் வன உயிரினங்கள் பற்றிய தகவல்கள் பார்வையாளர்களுக்கு எளிதில் தெரியும் வகையில், பூங்கா முழுவதும் அடையாளப் பலகை பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூங்காவின் இயற்கையான சூழலுக்கு மத்தியில் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சிப் பெறுவதற்கு இடம் அமைத்தல், நவீன் சுகாதாரமான சிற்றுண்டி உணவகம் அமைத்தல், நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக க்யூ ஆர் வசதியைக் கொண்டு வருதல் மற்றும் விலங்குகள் கூடாரங்களை செறிவூட்டுதல் போன்ற பல்வேறு நவீன வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
மேம்பாட்டுப் பணிகளைத் திறம்படவும், விரைவாகவும் முடிப்பதற்காக கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19- ஆம் தேதி முதல்அடுத்த ஆறு மாதங்கள் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.