பொன்னேரி ஏகலைவன் இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அரசு வேலையில் இணைந்த மாணவிக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை இணைந்து, பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ”ஏகலைவன் இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தை” நடத்தி வருகின்றனர். அதில் பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் இருக்க கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயனடையும் வகையில் நடத்தப்படுகின்றது.
அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சாருமதி என்ற மாணவி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கைத்தறி துறையில் அரசு வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார். இவர் ஏற்கனவே குரூப் 1 தேர்விற்கு இணையான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்கும் தேர்வு ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று, சார்மதியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் பாராட்டினார். அப்போது மக்கள் நலப் பணி இயக்க அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன், ஏகலைவன் இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தின் ஆசிரியர் கோகுல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.