Homeசெய்திகள்தமிழ்நாடு குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

-

- Advertisement -

குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து பெருமளவு அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து ஐந்தருவி, புலி அறிவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. பின்னர் பிற்பகலில் மெயின் அருவியிலும் குளிப்பதற்கு அனுமதித்துள்ளனர்.

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் . ஆதலால் சீசன் காலம் போல குற்றால அருவிகள் களை கட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அனைத்து பயணிகளும் உற்சாகமடைந்து நீராடி உள்ளனர்.

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால்
சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

 

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

MUST READ