Homeசெய்திகள்தமிழ்நாடுகுட்கா முறைகேடு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில்  முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தில்  முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

-

- Advertisement -

குட்கா முறைகேடு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், மத்திய – மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேருக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். இந்த நிலையில், குற்றப்பரித்திரிகை தயாராகாததால் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிபதி சி.சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

MUST READ