Homeசெய்திகள்தமிழ்நாடு"குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்"- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

“குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்”- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்"- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவு… தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துகள்…

கடலூரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்; அ.தி.மு.க.வின் குட்கா விவகாரத்தைத் திசைத் திருப்பவே அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. போதைப்பொருள் புகாருக்கு உள்ளானதும் தி.மு.க.வில் இருந்து சம்மந்தப்பட்டவர் நீக்கப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நாட்டில் அதிகளவில் போதைப்பொருள்கள் பிடிபடுவது குஜராத்தில் தான். நாட்டில் பல இடங்களில் போதைப்பொருட்களைக் கடத்துவது பா.ஜ.க.வினர் தான். கல்பாக்கம் அணு உலைத் திட்டம் ஆபத்தானது என்பதால், அது தொடர்பான விழாவில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை.

புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!

தமிழ்நாட்டை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக கல்பாக்கம் ஈனுலை திட்டம். ஸ்டெர்லைட் ஆலையை நிறுத்தியது போல் கல்பாக்கம் ஈனுலைத் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ