சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முகதீர்முகமது (36). குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவி குளியல் போட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருடன் வொர்க்கவுட் செய்த நபர்கள் சென்ற நிலையில், இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் அவரது தாய் அவருக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது ஜிம்மிற்கு வந்து பார்த்தபோது நீராவி குளியல் அறையில் முகமது காதிலிருந்து ரத்தம் வழிந்தபடி மயங்கி கிடந்தது தெரிந்தது.
அந்த அறையின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசார் கூறுகையில், முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது மற்றும் அவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி…. வெளியான புதிய தகவல்!