Homeசெய்திகள்தமிழ்நாடுமத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் ஹெச். ராஜா: பாய்ந்தது புகார்

மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் ஹெச். ராஜா: பாய்ந்தது புகார்

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச். ராஜா என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி இடம் புகார். மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் இந்து முன்னணி தயாரித்த வீடியோ பாடலை தடை செய்யவும் கோரிக்கை. பாடலை தயாரித்து வெளியிட்ட இந்து முன்னணியை தடை செய்ய வலியுறுத்தல்.மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் ஹெச். ராஜா: பாய்ந்தது புகார்மே 17 இயக்கம் மக்கள் அதிகாரம் தமிழக மக்கள் முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் தமிழக டிஜிபி இடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.அதில் கடந்த டிசம்பர் மாதம் இராஜபாளையத்தில் இருந்து இசுலாமியர் குடும்பம் ஒன்று திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி எனப்படும் ஆடு, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வந்தனர். திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா போகும் வழியில் திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மதுரை வீரன் தடுத்து நிறுத்தியுள்ளார்.  அதனை தொடர்ந்து ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

சிக்கந்தர் தர்கா இருக்கும் பகுதியின் இடம் 50 சென்ட் வக்பு வாரிய கட்டுபாட்டில் உள்ளதால் வக்பு வாரிய தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உணவுகளை தயாரித்து தர்காவில் சாப்பிட்டுள்ளார். ஆனால் இந்து முன்னணி, பாஜகவினர் பிரியாணி சாப்பிட்டுள்ளனர் என்றும் பொய் பிரச்சாரத்தை கிளப்பி மத வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை தேவஸ்தானம் அமைப்பு சொந்தமானது என்று கோரி தேவஸ்தானம் சார்பில் 1919இல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிக்கந்தர் தர்கா தவிர இதர பகுதிகள் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் 1920இல் தீர்ப்பு வழங்கியது. தர்கா அமைந்துள்ள இடமும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமானது என்று திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் சார்பாக 1924இல் மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் பழனியாண்டவர் கோயிலில் இருந்து நெல்லித்தோப்புக்கு செல்லும் பாதை தர்காவினருக்கும் தேவஸ்தானத்திற்கும் என இருதரப்பினருக்கும் பொதுவானது. நெல்லித்தோப்பு, உச்சிமலையில் தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுக்கள், கொடிமரம், ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட நிலங்கள் சிக்கந்தர் தர்காவிற்கு சொந்தமானது என்றும், இவை தவிர உள்ள பிற பகுதிகள் அனைத்தும் தேவஸ்தானத்திற்கு உரிமையானது  என்று 1931இல் நீதிமன்றம் இறுதித்  தீர்ப்னை வழங்கியது.

சமீபத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 1931ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கூடுதல் சார்பு நீதிமன்றம் கடந்த 2023 அன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது. கடந்த 1975ஆம் ஆண்டு தேவஸ்தானம் போர்டு சார்பில் மீண்டும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் மலை உச்சியில் உள்ள கொடிமரம் அருகே உள்ள இடத்திற்கு உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கும் தள்ளுப்படி செய்யப்பட்டு தர்காவின் நில உரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது.    அதேபோல கடந்த 1994 ம் ஆண்டு சமூக விரோதிகள் சிலர் மேற்படி கொடியினை திருடிச் சென்று விட்டு, தர்காவிற்கு சொந்தமான கொடிமரத்திற்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து அமைப்பினர் முயற்சி செய்தனர். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  கொடிமரம் அதன் அருகில் உள்ள இடங்கள் தர்காவிற்கு சொந்தமானது. இசுலாமியர்கள் உரிமை பாதிக்கும் வண்ணம் எந்தவித இந்து அமைப்புகளையும் அனுமதிக்க கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சிக்கந்தர் மலையில் தர்கா இருப்பதும் தர்காவிற்கு சொந்தமான இடங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என முஸ்லீம்கள் கூறுகின்றனர் என்று இந்து முன்னணி கலவரத்தை தூண்ட முயற்சி செய்து வருகின்றனர்.   இந்துமுன்னணி இந்த சம்பவத்தை முஸ்லீம் வெறுப்பு பாடல், மதவெறி பிரச்சாரம் என கலவரமாக்க திட்டமிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி பாஜகவினர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 4 அன்று திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். ஆனால் இந்து முன்னணி கலவர நாடகத்தை முறியடிக்க மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம் அறிவிப்பு என திட்டமிட்டு செயல்பட்டதும் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்ப மதுரை மாவட்ட நிர்வாகம் 144 போடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்த ரத்து செய்துள்ளனர்.

ஆனால் இந்து முன்னணியினர் பொய் பிரச்சாரம் செய்து முஸ்லீம் மக்களுக்கு எதிராக  அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைத்து அணி திரட்டியுள்ளனர். ஆனால் 144 தடையை மீறி போராட்டம் செய்தனர். அதன்பிறகு நீதிமன்றம் உத்தரவின் படி  நடத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டும் சில கட்டுபாடுகளையும்‌ விதித்து உத்தரவிட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த எச்.ராஜா அயோத்தி பாபர் மசூதி போல திருப்பரங்குன்றம் மாறும் என மதவெறி பிரச்சாரம் செய்துள்ளார். இந்த பொய் பிரச்சாரம் என்பது நீதிமன்றம் உத்தரவை மீறியதானது.

அதனால் இந்து முன்னணி, பாஜகவினர் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பிரச்சாரத்தை கிளப்பியதும், பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பாபர் மசூதியாக மாறும் என கலவரத்தை நடத்தும் நோக்கில் பேசியுள்ளார். பாடல் மூலம் மதவெறி பிரச்சாரத்தை செய்துள்ளதும், மேற்கண்ட மதவெறி பிரச்சாரத்தில் தாசில்தார், காவல் ஆய்வாளர் மதுரை வீரன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் என அதிகாரிகள் அனைவரும் இந்து முன்னணி பாஜகவினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.  மேற்கண்ட சம்பவத்தில் இஸ்லாமியருக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் கலவரம் செய்ய திட்டமிடும் நோக்கில் செயல்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர், பாஜக மாவட்ட செயலாளர், பாஜகவை சேர்ந்த எச்.ராஜா போன்றோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இந்து முன்னணி தயாரித்து வெளியிட்டுள்ள வீடியோவை தடை செய்யவும்  இந்து முன்னணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன், மதுரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர், தாசில்தார் போன்ற அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதவெறி, மதக் கலவரங்களை தூண்டி மதுரையை கலவரமாக்க திட்டமிடும் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்து மக்கள் கட்சியோர் இந்து முன்னணியோ இந்துக்களின் பிரதிநிதிகள் கிடையாது வடநாட்டு சக்திகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு.. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட வழிபாடுகளை அதிகாரிகள் ஏன் தடுத்தார்கள் என திருமுருகன் கேள்வி எழுப்பினார். இதை பாஜக நிர்வாகி ஹெச் ராஜா மதவெறி பிரச்சினையாக கையில் எடுத்துள்ளார். பிரச்சினையை ஏற்படுத்தும் எச். ராஜா மீது உடனடியாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் சில பள்ளிவாசல்கள் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டது. அந்த காலத்திலேயே எதிர்க்கப்படாமல் இருந்தது. அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஆனால் வன்முறை தூண்டும் வகையில் சில துன்பங்கள் செயல்பட்டு வருகின்றன. வன்முறையை தூண்டும் விதமாக செயல்படும் நபர்கள் மீது சட்டங்கள் பாயவில்லை எனக் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் – ராமதாஸ்

MUST READ