Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு வருசமா வீட்டு வாடகை கட்டவில்லையா அழகிரி? பாஜக கடும் தாக்கு

ஒரு வருசமா வீட்டு வாடகை கட்டவில்லையா அழகிரி? பாஜக கடும் தாக்கு

-

- Advertisement -

க்ச்

50 ஆண்டு பொது வாழ்க்கையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை மக்களவை உறுப்பினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி இவ்வாறு சொல்லி இருப்பதற்கு, சொல்வது யார்? பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி நடத்தி, மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்து, போலி சான்றிதழ்கள் கொடுத்து ஏமாற்றிய கல்லூரியின் தலைவர். கல்வி கொள்ளையில் ஈடுபட்டு, மோசடி செய்து சமுதாயத்தை பாழாக்கிய நபர், ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்பதும் மோசடியே! என்கிறார் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

MUST READ