ராமேஸ்வரம் ராமநாத சுவாமி “ஸ்படிக லிங்க தரிசனம்” செய்ய இலவசமாக அனுமதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர் கோபி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இலவச தரிசனம் செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுதாரரின் பின்புலம் என்ன என்பது குறித்து காவல்துறை ஆணையர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகின்றது. தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் மிகவும் பிரபலமான சிறப்பு பூஜை தரிசனம் என்பது “ஸ்படிக லிங்க தரிசனம்” ஆகும்.
இந்த ஸ்படிக லிங்கை பூஜைக்காகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்வதற்கு கட்டணமாக 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
இதனால் ஏழை எளிய பக்தர்கள் ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய முடியவில்லை எனவும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். பணம் இருப்பவர்கள் மட்டும்தான் ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை ராமேஸ்வர கோவிலில் நிலவி வருகிறது.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மனு அளித்து கேட்டபோது 50 ரூபாய் மட்டும் தான் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்ற தகவலை கோவில் நிர்வாகம் தந்துள்ளனர். ஆனால் ரூபாய் 200 வசூல் செய்து வருகின்றனர்.
மேலும் தினந்தோறும் ஸ்படிக லிங்க பூஜை காலை 5 மணி முதல் 5 30 மணி வரை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் 6:00 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செய்து வருகின்றனர். இது ஆகம விதிகளுக்கு எதிரானது 5:30 மணிக்குள் பூஜை முடிக்கப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு.. (apcnewstamil.com)
எனவே ஸ்படிகலிங்க தரிசனம் “கட்டணம் இல்லா தரிசனம்” செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இலவச தரிசனம் வேண்டும் என சிலர் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகும். கோவில்களை நிர்வாகிக்க இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. அதன் கீழ் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு உள்ள சூழலில் இது போன்ற கோரிக்கைகளை எவ்வாறு மனுவாக தாக்கல் செய்கின்றீர்கள்.
போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு (apcnewstamil.com)
இதே போல் திருப்பதி கோவிலில் கேட்பாரா? திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இதுபோன்று தாக்கல் செய்யப்படும் மனுதாரர்களுடைய பின்புலம் என்ன என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. இவர்களை யார் இயக்குகிறார்கள் என்பதும் நீதிமன்றத்திற்கு தெரிய வேண்டும்.
ஒரே நேரத்தில் இலவச தரிசனம் என்ற பெயரில் கூட்டத்தை அதிகம் கூட்டி ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருச்சி காவல்துறை ஆணையர் சிறப்பு குழு அமைத்து மனுதாரர் யார்? அவருடை பின்புலம் என்ன? மனுதாரரை ஏதேனும் இயக்கங்கள் இயக்குகிறதா? என்பது குறித்து முழு விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.