Homeசெய்திகள்துறைமுகம் பணிக்காக ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்

துறைமுகம் பணிக்காக ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்

-

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கப் பணிக்கு நன்றி கூறினார்.

தேங்காய்பட்டிணம் துறைமுக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தேங்காய்பட்டிணம் துறைமுக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பருவ மழைக்காலத்திற்கு முன்பாக தேங்காய்பட்டிணம் துறைமுக விரிவாக்கப் பணிகளை முடித்தால், அது மீனவ மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக அமையும் என தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் கடல் நீர் மீனவ கிராமங்களில் புகாமல் தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், நெய்யார் இடது கரை கால்வாயில் தண்ணீர் திறந்துவிட, கேரள அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும், வனத்துறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து ரப்பர் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் முதலமைச்சரிடம் விஜய் வசந்த் வழங்கினார்.

MUST READ