Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!

-

- Advertisement -

 

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!
Video Crop Image

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி….உற்சாகமாக வரவேற்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த முதுநிலை மருத்துவ மாணவி, கடந்த அக்டோபர் 06- ஆம் தேதி கல்லூரி விடுதியில் தற்கொலைச் செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தனது தற்கொலைக்கு துறைத் தலைவர் பரமசிவம் மற்றும் வகுப்பாசிரியர்கள் ஹரீஸ் மற்றும் பிரீத்தி ஆகியோர் காரணம் என மாணவி குறிப்பிட்டிருந்தார். மாணவி தற்கொலை வழக்கில், காவல்துறை அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்தது. இதனையடுத்து, துறைத் தலைவர் பரமசிவம் கைது செய்யப்பட்டார்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை மூடி மறைத்ததாகவும், மேலும் இரண்டு பேரை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

MUST READ