Homeசெய்திகள்தமிழ்நாடுகடும் வெயிலில் தவிக்கும் சேலம் மாவட்டம்!

கடும் வெயிலில் தவிக்கும் சேலம் மாவட்டம்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலான வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது சேலம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…

கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெயிலில் சதம் அடித்த மாவட்டங்களில் ஒன்று சேலம். ஏப்ரல் 23- ஆம் தேதி நாட்டிலேயே அதிக வெயில் பதிவான இடங்களில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது சேலம். இங்கு 10 நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இதனை தொடர்ந்து, ஏப்ரல் 23- ஆம் தேதி வெயிலின் அளவு 108 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது. இதனால் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசியது. அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெயிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிக்கையின் வாயிலாக தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காதது… இயக்குநர் தரணி நெகிழ்ச்சி…

இருப்பினும் வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள் என்ன செய்யவது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.

MUST READ