சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக உட்பகுதியில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
“வெளிநாடு செல்லும் பிரதமரைப் பார்த்து ஆளுநர் கூறுகிறாரா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அரபிக்கடலின் ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும். தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.
கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி
வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூன் 10- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.