Homeசெய்திகள்தமிழ்நாடு'தொடர் கனமழை'- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

‘தொடர் கனமழை’- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

-

 

'தொடர் கனமழை'- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!
Video Crop Image

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆங்காங்கே வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கும் நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

மழையில் மண்ணை அரித்துச் செல்லும் வெள்ளம் செந்நிறமாகக் காணப்படுகிறது. தரைப்பாலத்தை ஒட்டிச் செல்லும் மக்கள், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைப் பகுதி என்பதால், பலத்த மழையில் மண் அரிக்கப்பட்டு மரங்கள் விழக்கூடும் எனக் கருதி மரங்களின் கீழே நிற்கவோ, கார்களை நிறுத்தவோ வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

விஜயகாந்துக்கு தேவைப்படும்போது செயற்கை சுவாசம்… தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை…

தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பள்ளி வாகனங்கள், மாணாக்கர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

MUST READ