Homeசெய்திகள்தமிழ்நாடுசெம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!

செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!

-

 

செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!
File Photo

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை நகர் மற்றும் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, வீராணம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை இன்று (நவ.30) காலை 08.00 மணிக்கு உயர்த்த பொதுப்பணித்துறை முடிவு செய்து அறிவித்துள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..

அதன்படி, தற்போது ஏரியில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இன்று (நவ.30) காலை 08.00 மணி முதல் வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஏரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புழல் ஏரியில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ