Homeசெய்திகள்தமிழ்நாடுவிழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து

விழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து

-

விழுப்புரத்தில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பல்வேறு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அதன்படி மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், நெல்லை- சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதேபோல், சென்னை – திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ்,  விழுப்புரம் – தாம்பரம் மெமு பயணிகள் ரயில் மற்றும் புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுரையில் இருந்து சென்னை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

MUST READ