Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு! 

-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊத்தங்கரையில ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகனங்கள் நீரில் முழ்கின. இதேபோல், போச்சம்பள்ளியில் கோனானூர் ஏரி உடைந்ததால் சமத்துவபுரம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போச்சம்பள்ளியில் 25 சென்டி மீட்டர் மழையும், பாம்பாறு அணை, பாருர் பகுதிகளில் தலா 20 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, பாம்பாறு அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 15ஆயிரம் கனியாக அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் ஊத்தங்கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேரில் பார்பையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

MUST READ