
சென்னை வேளச்சேரியில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த விபத்தில் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!
கடந்த டிசம்பர் 04- ஆம் தேதி பொழிந்த பெரும் மழையின் போது, வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில், தனியார் நிறுவனம் தோண்டிய பள்ளம் சரிந்து, விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
எஞ்சியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தமிழக தீயணைப்புத்துறையினர் ஈடுபட்ட நிலையில், தண்ணீரை வெளியேற்ற நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து பெரிய மோட்டார், கிரேன் எடுத்து வரப்பட்டது. இதன் உதவியால் நீண்ட முயற்சிக்கு பிறகு பள்ளத்தில் சிக்கிய நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டனர்.
அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!
இது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவுச் செய்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர் சிவக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.