சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்புப் பரிந்துரைச் செய்துள்ளது.
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் நக்கீரன், மாலா, சௌந்தர், சுந்தர் மோகன், குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து, கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பும். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.