Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

-

- Advertisement -

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
Photo: Chennai High Court

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார். பின்னர், அவரும் ஓய்வுப் பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.

கவின் பட இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் துருவ் விக்ரம்!?

சுமார் எட்டு மாதங்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த டி.ராஜா, மே 24- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். இதைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்கப்பூர்வாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலீஜியம் பரிந்துரைச் செய்திருந்தது. இதையடுத்து, அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’… படப்பிடிப்பு நிறைவு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நான்கு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ