சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமிக்க, கொலீஜியம் அமைப்பு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைச் செய்திருந்தது. இதனை ஏற்ற சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பியது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.