Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம் இதுதான்!

இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம் இதுதான்!

-

 

திறக்கப்படவுள்ள கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கலைஞர் கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.26) திறந்து வைக்கிறார்.

மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை சிக்க வைத்த முதியவர்!

முகப்பின் வலதுபுறம் இளங்கோவடிகள், இடதுபுறம் கம்பர் சிலைகள், கலைஞர் கருணாநிதி சதுக்கத்தில் இருபுறம் கடிதம், ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமாகவும், பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடனும் அருங்காட்சியகமும், பேரிடர் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்து, தான் சந்தித்த தேர்தலில் தோல்வியைச் சந்திக்காமல் இருந்த கலைஞர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7- ஆம் தேதி காலமானார். சட்டப்போராட்டத்துக்குப் பிறகு கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

திறக்கப்படவுள்ள கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

விஜயதரணி பதவி விலகலை ஏற்றார் சபாநாயகர் அப்பாவு!

நினைவிடம் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் நாளை (பிப்.25) மாலை 07.00 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

நினைவிடத்தின் முகப்பு தோற்றம்:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் ‘அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம்’ எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளேசென்றால் எதிரில் அமர்ந்து படிப்பதுபோன்ற தோற்றத்தில் அண்ணாசிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடதுபுறம் கம்பர் சிலைகள்அமைந்துள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணா சதுக்கத்தைக் கடந்து சென்றால் அமர்ந்த நிலையில் கலைஞர் கருணாநிதி எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி சதுக்கம்:

சிலையைக் கடந்துசென்றால் கலைஞர் கருணாநிதி சதுக்கத்தைக் காணலாம். கலைஞர் கருணாநிதி சதுக்க பகுதியில் கலை, இலக்கியம், அரசியல் என பல்வேறு துறைகளில் உதயசூரியன் முத்திரை பதித்ததன் அடையாளமாக கருணாநிதியின் நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!

சதுக்கத்தில், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’எனும் தொடர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி சதுக்கத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என மத்திய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2005-ம் ஆண்டு நவ.8- ஆம் தேதி எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் உலகம்:

கலைஞர் கருணாநிதி சதுக்கத்திற்கு கீழே நிலத்தடி பகுதியில் “கலைஞர் உலகம்” என்ற பெயரில் அருங்காட்சியகம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகத்தின் நுழைவு பகுதியில், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற வாசகம் நம்மை வரவேற்கிறது.

திறக்கப்படவுள்ள கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், குடிசை மாற்று வாரியம், டைடல் பார்க் போன்ற கலைஞரின் முத்திரை பதித்த சிறப்பான திட்டங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளே செல்லும் மற்றும் வெளியே வரும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் நினைவு அறையில் கருணாநிதியின் வரலாற்று நிகழ்வுகள், பணிகள், போராட்டங்கள், இளமைக்காலம் முதல் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 1951-ஆம் ஆண்டில் இருந்து வரை அவரது கடைசி பயணம் வரை அனைத்து புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.

கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்து நமக்கு மலைப்பைத் தருகின்றன.

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!

அடுத்து “உரிமைப் போராளி கலைஞர்” எனும் தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால் – தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்து நம்மை வரவேற்கிறது.

அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப் புறத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மெழுகுச் சிலையாக நின்று நம்மை மகிழ வைக்கிறார்.

‘கலைஞர் படைப்புகள் – நெஞ்சுக்கு நீதி’, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும். அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால் அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.

அடுத்து, “அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறைக்குள் செல்லலாம். எதிரே கலைஞரின் பெரிய நிழற்படம். வலப்பக்ம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை: அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கலைஞர் அவர்களின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றி நம்மை வியக்க வைக்கும் .

அடுத்த அறையில், “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்புடையது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும். வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்துவது நம்மை மெய் சிலிர்க்க வைத்திடும்.

அதேபோல், அனைவரும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் 3D 7D வகைகளில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு விளக்க படங்கள் ஒளிப்பரப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்த்து வெளியேவர நினைத்தால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் கலந்து பேசிப் பழகிய ஓர் புதிய அற்புத உணர்வு நமக்கு ஏற்படும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா திருநாவுக்கரசர்?

மேலும், கலைஞர் புத்தக விற்பனை நிலையமுமம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நினைவிடம் திறப்பு:

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தையும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் திறந்து வைத்து பிறகு நாளை மறுநாள் முதல் கருணாநிதி நினைவிடம் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பார்வை:

கலைஞர் உலகம் என்ற அருங்காட்சியகம் திறக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும் வகையில் தனியாக இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் இங்கு வருகை தந்தால் அவர்களுக்கு டேக் வழங்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் வரை அருங்காட்சியகத்தை முழுவதுமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

பேரிடர் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது:

கலைஞர் கருணாநிதி சதுக்கத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் பேரிடர் காலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகத்தில் பொதுமக்கள் பார்க்கும் சுவருக்கு பின்பு இரண்டு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது சுவர் மட்டுமே நமக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!

இந்த இரண்டு சுவர்களும் பேரிடர் காலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் உள்ளே புகுந்தால் அவற்றை வெளியேற்றுவதற்கான மோட்டார்களும் அந்த சுவர்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, கடலுக்கு அருகில் இருந்தாலும் பேரிடர் காலத்தில் கலைஞர் உலகம் எந்தவித பாதிப்பும் அடையாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ