
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 02- ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!
தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டல மக்கள் ஏராளமானோர் சென்னையில் இருந்து கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றன.
இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துச் சென்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர், பல்வேறு மாற்று ஏற்பாடுகளைச் செய்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சீரான முறையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இரு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டிசம்பர் 21 இல் நடைபெற இருந்த ‘லால் சலாம்’ ஆடியோ லான்ச் என்னாச்சு?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடைகளை வாங்கவும், தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் அவசர ஊர்திகளும் சிக்கித் தவித்தனர்.