- Advertisement -
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமித்ஷா வரும் 27ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.