Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!

தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!

-

 

தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!
File Photo

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, இன்றிரவு (ஜூன் 10) சென்னை வருகிறார். அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எதிர்க்கட்சிகளைப் போலவே ஆளும் பா.ஜ.க.வும் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தங்களுக்கு சவாலாக இருக்கும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று (ஜூன் 10) இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், தமிழகத்தின் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பா.ஜ.க.வின் மாநில மையக்குழுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக அமித்ஷா விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து

நாளை (ஜூன் 11) கோவிலம்பாக்கத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் வியூகம் குறித்து கட்சியினருக்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தேசிய அளவிலும், தமிழகம் அளவிலும், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து உரையாற்றுகிறார்.

MUST READ