பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேன் குளவி 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களுடன் மூன்று தனியார் பேருந்துகளில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்க்க இன்று மதியம் வந்திருந்தனர்.
இந்நிலையில் ஆழியார் அணை வேட்டைக்காரன் புதூர் கால்வாய் அருகே மாணவர்கள் சென்ற இடத்தில் இருந்த தேன் குளவிக்கூடு கலைந்ததாக தெரிகிறது. இதை அறிந்த மாணவ மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந் நிலையில் மாணவர்களை தேன் குளவி விடாமல் துரத்தி கொட்டியதில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.அதில் 20க்கும் மேற்பட்டோர் ஆழியார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆறு பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு: மனித உரிமை ஆணையர் பரிந்துரை