Homeசெய்திகள்தமிழ்நாடுஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையில் உள்ள ரசாயன கிடங்கில் அதிகாலை 6 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அதிகளவிலான கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே தீ விபத்து தொடர்பாக ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

MUST READ