Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் மருத்துவமனை திறப்பு விழா - ஜனாதிபதி வருகை ரத்து

கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து

-

- Advertisement -

கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி திறக்கப்படவிருந்த மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கவில்லை.

Tamil News Live Today: டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்! | latest tamil news live today updates dated on 28-04-2023 - Vikatan

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 5-ம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் விழாவில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்படுகிறது. எனவே குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் மருத்துவமனையை திறக்கலாமா? அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.

MUST READ