Homeசெய்திகள்தமிழ்நாடுபாறை உருண்டு விழுந்ததில் மண்ணில் புதைந்த வீடுகள்... மீட்பு பணிகள் தீவிரம்!

பாறை உருண்டு விழுந்ததில் மண்ணில் புதைந்த வீடுகள்… மீட்பு பணிகள் தீவிரம்!

-

திருவண்ணாமலையில் கனமழை காரணமாக அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் இடிபாடுகளுக்குள்  சிக்கியுள்ள 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழை பெய்த நிலையில் நேற்று மாலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட ராட்சத பாறை வ.ஊ.சி நகர் 11-வது தெருவில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது மகன் கௌதம், மகள் இனியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா, வினோதினி, மகா ஆகிய 7 பேரையும் காணவில்லை. அதனால் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்து இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். நேற்றிரவு மழை பெய்து கொண்டு இருந்ததால் மீட்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

MUST READ