Homeசெய்திகள்தமிழ்நாடுமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் - இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

-

- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க -மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கடந்த 18ம் தேதி திருச்சி கே.கே நகர் ஓலையூர் ரிங் ரோடு அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் பராமரிப்பு பணியை மேற்கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் கலாமணி மற்றும் மாணிக்கம் இருவரும் உயரழுத்த மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மின் இணைப்பை துண்டித்த பிறகு இரண்டு ஒப்பந்த பணியாளர்களும் பராமரிப்பு பணியை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில் திடீரென மின்சாரம் எப்படி பாய்ந்தது? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மின்சாரத் துறையின் இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இதற்கு முன்பு தமிழகத்தில் இதேபோன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற நிகழ்வுகள் மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ள ஆணையம் கவலைக்குரிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை குறித்தான விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தான விவரங்கள் இடம்பெற வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

MUST READ